வலைப்பேச்சு





எதைக்கேட்டாலும்
அல்வா தரும் நீ
அல்வாவைக் கேட்டால்
எதைத் தருவாய்..?
- ஆத்மார்த்தி

ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியைப் போக்கிட இந்தியா 60 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் - பிரதமர்
# அரைக்கிலோ அரிசி வாங்க எங்க அக்கா அல்லாடி நிக்குறா, ஜில்பான்ஸு ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூவாயா?? அறிவுகெட்ட மடப் பஞ்சாயத்து... பஞ்சாயத்துக்கு பாலிடால் ஊத்தினது தப்பே இல்ல!
- ரா.புவன்

பாகிஸ்தான் புடிச்சிட்டுப் போனா இந்திய மீனவர்களாம்.
இலங்கை புடிச்சிட்டுப் போனா தமிழக மீனவர்களாம்.
# கேட்டா ‘நீ தேசத்துரோகி, சோமாலியாவுக்கு போடா’னு சொல்றாய்ங்க நாராயணா!
- முத்து ராம்

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு யார நிறுத்துறதுன்ற ஆலோசனைய இப்பவே பிஜேபி ஆரம்பிக்கிறது
நல்லது.
5 வருஷம் போதுமில்ல யாருன்னு முடிவெடுக்க?
- தடாகம் வெப்

கேள்வி: பொருளாதார தேக்க
நிலையைக் கட்டுப்படுத்த என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..?
மன்மோகன்: முதற்கட்டமாக நிதி அமைச்சர் பிரணாப்பை ஜனாதிபதி ஆக்குவதாய் தீர்மானிக்கப்பட்டுள்ளது
# கககபோ
- சங்கர் நாராயண்


பரு பரவாமல் இருக்கவும், எய்ட்ஸ் வராமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
எதுவுமே செய்யக் கூடாது
- முகமூடி

வறண்டுபோன நிலையில்
கிடைக்கும்
ஒரு துளி ஆறுதல்
சமுத்திரத்துக்கு சமம்!
- ஆர்.சி.மதிராஜ்

தெரு நாய்களின் மீது அன்பு செலுத்துங்கள்
- த்ரிஷா
எங்கப்பா கூட என்னைய ரொம்ப நாளா ‘நாயே... நாயே...’ன்னுதான் சொல்றாரு டார்லிங்!
- ரா.புவன்