சைஸுக்கு ஏற்ற உணவு!



- ரோனி

டிவி வாங்கினால் ரிமோட் ஃப்ரீ, புடவை எடுத்தால் காய்கறி ஃப்ரீ, இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ஆஃபர்களை அண்ணாச்சி டூ அசந்தா & கோ வரை கேட்டு சலித்திருப்போம். ஆனால், இதெல்லாம் சீனா தள்ளுபடிக்கு முன் நிற்கவே முடியாது! சீனாவின் ஹாங்சூ மாலிலுள்ள டிரெண்டி ஷிரிம் ஹோட்டலின் விளம்பரம் அது. தள்ளுபடியின் ரேஞ்சை பார்த்துத்தான் பலரும் அதிர்ச்சியானார்கள்.

பெண்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர் அது. அதாவது பெண்களின் உள்ளாடை சைஸைப் பொறுத்து சாப்பிடும் உணவின் விலையில் டிஸ்கவுண்ட் அமையும்! இந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் டென்ஷனாகி உள்ளூர் கவுன்சிலில் புகார் செய்ய, விளம்பர பேனர் உடனே அகற்றப்பட்டது. ‘‘இந்த விளம்பரத்தினால் பிஸினஸ் 20% எகிறிவிட்டது. பெண்களே இதை குறை சொல்லவில்லை. பெண்களின் உள்ளாடை அளவை வெயிட்ரஸ் பெண்கள்தான் அளப்பார்கள்...’’ என தோளைக் குலுக்குகிறார் ஹோட்டல் மேனேஜர்.