ஃபேக்டரியை எரித்த அணில்!
வெற்றிக்கு அணிலாக உதவினேன் என்று சிலர் வெட்டிப் பெருமை பேசுவார்கள். நிஜமாகவே அணில் உதவியா, உபத்திரமா என கீழேவரும் சீஸ் ஃபேக்டரி ஓனர்தான் சொல்லவேண்டும். கனடாவின் பர்னபி பகுதியிலுள்ள ஸ்கார்டில்லோ சீஸ் ஃபேக்டரிதான் சம்பவம் நடந்த ஸ்பாட். காலை 9 மணிக்கு அப்பகுதியின் ஃபயர் சர்வீஸ் நிலைய அலாரம் ஒலித்தது. நெருப்புடா என பதறிய வீரர்கள் உடனே மின்னல் வேகத்தில் சீஸ் ஃபேக்டரியில் என்ட்ரியானார்கள்.
என்ன ஆச்சு? அணில்தான். பல்லை வைத்துக்கொண்டு பழம், பாதாம் என தின்னாமல் முக்கிய பவர்லைனின் வயர்களை கடித்து வைக்க, ஃபேக்டரி முழுக்க தீ பிடித்துவிட்டது. 4 வண்டிகள், 15 ஃபயர் ஆட்கள் என 12 மணிநேரம் போராடி தீயை அணைத்ததில் சீஸ் செய்ய வைத்திருந்த 20 ஆயிரம் காலன் பாலும் காலி. இப்போது சொல்லுங்கள். அணில் உதவியா உபத்திரவமா?!
|