வயிற்றுக்குள் கம்பி !
- ரோனி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த ஆன்ட்டிக்கு அன்று அப்படியொரு வயிற்றுவலி. அவருக்கு சிகிச்சையளித்த சார்லஸ் கார்ட்னர் மருத்துவமனை தன் ஹிஸ்டரியில் அப்படியொரு பேஷண்டை பார்த்ததில்லை. வலியில் துடித்தவரை அப்படியா என்று கேட்டு, மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பிவிட்டனர். அடுத்தநாளே ஆம்புலன்சில் வந்து வலி என்று கதறியவரை உடனே ஆபரேஷன் தியேட்டரில் படுக்க வைத்து அவரை செக் செய்தபோது, வயிற்றின் சிறுகுடலை பங்க்சர் செய்த 7 செ.மீ., கம்பி ஒன்று டாக்டர்களின் கண்ணில் மாட்டியது.
‘கம்பி சாப்பிடற வழக்கம் இருக்கா ஆன்ட்டி?’ என டாக்டர்கள் கேட்டபோதுதான், அது 10 ஆண்டுகளுக்கு முன் அவரது பற்களில் கட்டிய கம்பி என்பதும், அதை தவறுதலாக அப்போது அவர் விழுங்கியிருப்பதும், அதுவே இப்போது சிறுகுடலை பதம் பார்த்திருக்கிறது என்பதும் தெரிய வந்தது சிறு கம்பியும் பல்குத்த உதவும் என இனியும் சொல்வோமா?!
|