காப்பாத்துங்க அமைச்சரே!



குறைந்தபட்ச அமைச்சரவை அதிகபட்ச நிர்வாகம் என்ற லட்சியத்தில் அணுவளவும் பிறழாமல் மாதம் ஒரு வரி, மாதம் ஒரு மிட்நைட் அறிவிப்பு என மெட்ரோ ரயில் வேகத்தில் செல்லும் பிரதமர் மோடியின் டீம், அவருக்கு ஈடுகொடுத்து தினசரி அட்டண்டன்ஸ் போடும் ஒரே இடம் ட்விட்டர்தான். அதிலும் 9 மில்லியன் ஃபாலோயர்களுடன் உருப்படியாக செயல்படும் அமைச்சர்களில் சுஷ்மா சுவராஜூம் ஒருவர். அதற்காக அவரை கலாய்த்து கலாட்டா செய்யாமல் விடுவார்களா நம் நெட்டிசன்கள்?

வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா, அயல்நாட்டு பிரச்னைகளை தன் ட்விட்டர் கணக்கு மூலமே சிம்பிளாக அடையாளம் கண்டு தன் பரிவாரங்கள் மூலம் தீர்த்து வைப்பது உலகிற்கே தெரியும். அண்மையில் வெளியான ‘Jab Harry Met Sejal’ படத்தை பார்த்த புனே ரசிகர், படம் தந்த அமேசிங் விரக்தியில் ‘என்னை காப்பாத்துங்க அமைச்சரே’ என சுஷ்மாவுக்கு ஜாலி கலாய் ட்விட் அனுப்ப, அதை பின்னர் பலரும் வழிமொழிய பதிவுகள் ட்விட்டரில் வைரலாகிவிட்டன. அமைச்சருக்கே இந்த கதியா?