55 ஆயிரம் மில்லியன் ஜிபி!



தலைப்பைப் படித்ததுமே இது என்னவென்று இந்தத் தலைமுறையினருக்குப் புரிந்திருக்கும்.

வேறு எந்த துறையையும் விட இணைய சேவையை நுகர்வதில் இந்தியர்கள் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றனர். எப்போது இந்தியர்களின் கரங்களில் ஸ்மார்ட்போன் தவழ ஆரம்பித்ததோ அப்போதிருந்து இணைய பயன்பாடும் அதிகரித்துவிட்டது. தவிர, நெட்வொர்க் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலையில் இணைய சேவையை வழங்குவதும் இதற்கு மூல காரணம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு, அதாவது 2015ல் வெறும் 88 மில்லியன் ஜிபி டேட்டாக்களை மட்டுமே இந்தியர்கள் நுகர்ந்திருந்தனர். கடந்த வருடம் இது 46 ஆயிரம் மில்லியன் ஜிபியாக எகிறியது. இப்போது 55 ஆயிரம் மில்லியன் ஜிபியைத் தொட்டுவிட்டது. 2014ல் 281 மில்லியனாக இருந்த இணைய பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் வரையிலான கணக்கின்படி 664 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2023ல் இந்த எண்ணிக்கை 800 மில்லியனாக இருக்கும் என்கிறது ‘ட்ராய்’!

த.சக்திவேல்