நியூஸ் சாண்ட்விச்



63 பணக்காரர்களின் சொத்து, நாட்டின் பட்ஜெட் தொகையைவிட அதிகம்!

Oxfam என்ற அமைப்பின் ஆய்வு ஓர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஓராண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 24,42,200 கோடி. இது நம் நாட்டில் வாழும் 63 பணக்காரர்களின் முழு சொத்து மதிப்பை விடக் குறைவாம்!இந்தியாவின் 1% பணக்காரர்கள், 95.3 கோடி மக்களின் மொத்த செல்வத்தை விட 4 மடங்கு அதிக செல்வத்தை வைத்துள்ளனராம்!

அரண்மனையை விட்டு வெளியேறும் இளவரசர்

பிரிட்டன் அரசி ராணி எலிசபெத்தின் பேரனும் டயானாவின் இரண்டாவது மகனுமான இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை திருமணம் செய்து எட்டு மாத குழந்தையுடன் பக்கிங்காம் அரண்மனையில் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென ஹாரியும் மேகனும் தங்கள் இளவரசர் - இளவரசி பட்டத்தை துறந்து சாதாரணமாக வாழ விரும்புவதாக அறிவித்துள்ளனர்!இதுவரை பிரிட்டன் அரச குடும்பத்தில் யாரும் இதுபோல தனியாக பிரிந்து வாழ்ந்தது கிடையாது என்பதால், அரச குடும்பத்தினரும், நாட்டு மக்களும் அதிர்ச்சி + வியப்புடன் இவர்களைப் பார்க்கின்றனர்!

ஸ்வேதா கண்ணன்