கர்ப்பிணியின் வயிற்றைத் தொட்ட நடிகர்!



ரசிகர்கள் ஆயிரம் கோரிக்கைகளை வைப்பார்கள். அதை எல்லாம் நிறைவேற்ற முற்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் இப்போதைய நிலையே ஓர் உதாரணம்.கேரள மாநிலம் திருச்சூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். அதற்காக அவர் பிரசாரம் மேற்கொண்டபோது அவரிடம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரு கோரிக்கையை வைத்தார்.

அதாவது, தன் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று சுரேஷ் கோபியும் அவர் வயிற்றில் கைவைத்தார்.
அவ்வளவுதான். சுற்றியிருந்தவர்கள் இதை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து சமூகவலைத்தளத்தில் ஏற்றினார்கள்.

கிழிந்தது கிருஷ்ணகிரி! அந்தப் பெண்தான் வெகுளியாகக் கேட்டார் என்றால்... பொறுப்புள்ள ஓர் நடிகர், மக்களவை வேட்பாளர் அவர் வயிற்றில் தன் கையை வைப்பதா என காய்ச்சி எடுத்தார்கள்; எடுக்கிறார்கள்!
அதானே?!