அஞ்சு பன்ச் சூர்யா
 *அரசியலின் மீது நல்ல கவனிப்பு உண்டு. ஆனால், வழிநடத்தும் ஆசையெல்லாம் கிடையாது. *நேரம் இருந்தால் அகரம் அலுவலகத்தில் அமர்வார். உதவி ேகட்டு வரும் மாணவர்கள் முதலில் திகைத்துவிட்டு அவரிடம் பேசத் தொடங்குவார்கள்.
*புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு தர அதிகம் யோசிப்பார். ஒரு தடவையாவது நிரூபித்தவர்களுக்குத்தான் முன்னுரிமை.
*படப்பிடிப்பில், தான் உண்டு என்றிருப்பார். ஹீரோயின்களிடம் ஜல்லி போடுவது கிடையாது. நெருங்கி நடிக்கவே மாட்டார்.
*தங்கை பிருந்தா மீது அலாதி பிரியம். அவுட்டோர் போய் திரும்பினால் கொஞ்ச நேரத்தில் தங்கை வீட்டுக்கு விசிட் போய்விடுவார்.
|