மிரண்டுபோனோம்!
 ‘சன் பிக்சர்ஸி’ன் ‘காஞ்சனா 3’யைப் பற்றி லாரன்ஸ் சொன்னவை யாவும் அப்படியே இருக்கும். ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்புகள் ஒருபோதும் சோடை போனதில்லை. - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; இலக்சித், மடிப்பாக்கம்; மயிலை.கோபி, அசோக் நகர்; ஆசை. மணிமாறன், திருவண்ணாமலை; பிரேமா குரு, குரோம்பேட்டை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சந்திரமதி, சென்னை; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்.
துணிவு மொழியால், பணிவு மொழியால் கனிமொழி அளித்துள்ள பேட்டி வாக்காளர்களை நிச்சயம் கவர்ந்திருக்கும். - மாணிக்கவாசகம், கும்பகோணம்; கைவல்லியம், மானகிரி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
போலி வாக்காளர்களை அறவே ஒழித்திட முடியாத நமது தேர்தல் கமிஷனின் கையறு நிலை அய்யோ பாவம். - க.நஞ்சையன், பொள்ளாச்சி; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; பப்பு, அசோக் நகர்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; மனோகர், மேட்டுப்பாளையம்.
‘லோக்பால் வரலாறு’ அறிந்துகொண்டோம். ஆவலுடன் அதன் செயல்பாடுகளைக் காணக் காத்திருக்கிறோம். - மாணிக்கவாசகம், கும்பகோணம்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; பிரேமா ராஜ் குமார், குன்னூர்; கருணாகரன், போரூர்.
‘இனி நடிக்காதீங்க’ன்னு சமந்தாவை ரவுண்டு கட்டிய ரசிகர்கள் கட்டுரைக்குத் திரண்டு நிற்கும் சமந்தாவின் புகைப்படம் கண்டு மிரண்டு போனேங்க. - ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; முரளி, நங்கநல்லூர்; தெய்வசிகாமணி, வேளச்சேரி; பிரேமா குரு, குரோம்பேட்டை; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; மனோகர், மேட்டுப்பாளையம்; நடராஜன், சென்னை; ஆசை.மணிமாறன், சென்னை.
‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஐரா’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த அஸ்வந்துக்கு... இல்லை இல்லை, ராசுக்குட்டிக்கு ‘அடுத்த கமல்’ என்ற பட்டம் பொருத்தமானதே. - வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; ஜெயசந்திரபாபு, சென்னை; மயிலை.கோபி, அசோக் நகர்; கைவல்லியம், மானகிரி.
ஐம்பூதங்களின் அரவணைப்பில் அமைதியாக வாழ்கிற பழங்குடிகளைத் தேடிச்சென்று அவர்களின் குடி கெடுத்துவிடாதீர்கள் என்று அறிவுறுத்தும் கட்டுரை அருமை. - புகழ்மதி, ஆதம்பாக்கம்; ஆ.சீனிவாசன்,எஸ்.வி.நகரம்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.
தன்னம்பிக்கை நாயகியாக ஜொலிக்கும் ‘ஐரா’ கேப்ரெல்லாவின் வாழ்க்கைப் பயணக் கட்டுரை உண்மையில் கம்பீரம். - மகேஸ்வரி, பொள்ளாச்சி; சம்யுக்தா சுதாகர், சென்னை; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்.
ரீடர்ஸ் வாய்ஸ்
|