டெஸ்ட் டியூப் பேபிக்கு பேபி!
ஜெங் மெங்ஷூ. பெயர் நாக்கிலேயே நுழையவில்லையா..? நோ ப்ராப்ளம். இவர்தான் சீனாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை.
 1988ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, சங் லிங் மருத்துவமனையில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிரபல மருத்துவர் ஷாங் லிசு மேற்பார்வையில் இவர் பிறந்தார். இவர் வளர்ந்து ஆளாகி திருமணமும் செய்துகொண்டார். கர்ப்பமானார். பிரசவ வலி எடுத்தது. உடனே பெய்ஜிங்கில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பிரிவு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
டாக்டர்கள் குழு பரிசோதித்து சிசேரியன் செய்தார்கள். ஆபரேஷன் சக்சஸ். ஜெங் மெங்ஷூவுக்கு 3 கிலோ 850 கிராம் எடையில் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது! யெஸ். சீனாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது மானுட இனப்பெருக்கத்தின் மற்றொரு மைல்கல்!
காம்ஸ் பாப்பா
|