திவ்யாவுக்கு ஷ்யூரா கிடைச்சது பப்ளிசிட்டி!





கிட்டத்தட்ட ஒரு வாரமாக தமிழ்நாட்டையே கலக்கிவிட்டது ‘திவ்யாவுக்கு ஷ்யூரா கிடைக்குமா?’ விளம்பரம். ‘யாருடா திவ்யா?’ என்பதில் தொடங்கி, ‘என்ன கிடைக்கும்? எப்போது கிடைக்கும்?’ என ஏகப்பட்ட கேள்விகளை மக்களிடையே எழுப்பி விட்டது இந்த ஒற்றை வரி. அரசே கிளப்பிவிட்ட அந்த ‘ராஜா’ விளம்பரம் நினைவிருக்கலாம். வெகு காலத்துக்குப் பின், ‘வெற்றிகரமான டீசர்’ என்ற பட்டத்தை இந்த ‘திவ்யா’வுக்கு தாராளமாகத் தரலாம்!
இந்த விளம்பர ஐடியாவை உருவாக்கி செயல்படுத்தியிருப்பது சென்னையைச் சேர்ந்த வினிஷா விஷன் விளம்பர நிறுவனம். இதன் நிர்வாக இயக்குநர் கே.வி. கதிரவனிடம் பேசினோம்...

‘‘பொதுவாக, இப்படிப்பட்ட டீசர் விளம்பரங்கள் ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் சஸ்பென்ஸை உடைத்தவுடன் அது அடங்கிவிடும். ஆனால், உதயம் பருப்பு வகைக்காக நாங்கள் உருவாக்கிய இந்த விளம்பரத்தைப் பொறுத்தவரை, 50 ஆயிரம் பேருக்கு நிச்சயப் பரிசு என்பதுதான் சஸ்பென்ஸ். இது இல்லத்தரசிகள் பலரையும் ஈர்த்திருக்கிறது. தினம் தினம் பரிசுக்குரியவர்கள் பட்டியலை ஷ்ஷ்ஷ்.ஜீuக்ஷீமீணீஸீபீsuக்ஷீமீ.நீஷீனீ   என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இன்னும் அதிகரித்திருக்கிறது. ‘திவ்யாவுக்கு ஷ்யூரா கிடைக்குமா?’ டீசரை பத்திரிகை, டி.வி, ரேடியோ என 360 டிகிரியில் விளம்பரப்படுத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பெரிய மகிழ்ச்சி!’’ என்றார் அவர் உற்சாகமாக.
திவ்யாவுக்கு ஷ்யூரா கிடைச்சது பப்ளிசிட்டி!