அதகளம்!



ரீடர்ஸ் வாய்ஸ்

விஜய், கார்த்தி, ஆர்யா என அதகளம் பண்ணிட்டீங்க தலைவா. இரட்டைச் சிறப்பிதழ் சுவையும் சுவாரஸ்யமுமாய் மிளிர்ந்தது.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; என்.அத்விக், அசோக் நகர்; எஸ்.சண்முகம், திருவண்ணாமலை; நிலவழகு, நீலாங்கரை.

அர்ச்சனா கல்பாத்தியின் ‘பிகில்’ பட விவரங்களும் அவரது பொறுப்புகளும் விசேஷமாக விவரிக்கப்பட்டிருந்தது சிறப்பு.
- பிரேமா குரு, சென்னை; கருணாகரன், போரூர்; கதிர், மதுரை; இலக்சித், மடிப்பாக்கம்; கீதா, கோவில்பட்டி; ஆர்.ஜெ.சி, சென்னை.

‘அசுரன்’ படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்து நெகிழ வைத்த டி.ஜே.அருணாசலம் மற்றும் இளைய மகனாக நடித்து அதிரவைத்த கென் கருணாஸைப் பற்றிய குறிப்புகள் அசத்தல்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; கவுரிநாத், பரங்கிமலை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; கைவல்லியம், மானகிரி.

நாவல்களுக்குத் திரும்பும் தமிழ் சினிமாவின் வளர்ச்சி மென்மேலும் உயரும். இன்னும் தரமான கருத்தை தாங்கிய படங்கள் வெளிவரும். இதில் துளி கூட சந்தேகமே இல்லை.
- கோ.தியாகராஜன், கீழ்வேளூர்; என்.சண்முகம், திருவண்ணாமலை; கருணாகரன், போரூர்; கண்ணன் பாலு, மதுரை; கீதா, கோவில்பட்டி; மியாவ்சின், கே.கே.நகர்.

‘கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்’ வழியாக திருச்சேறை சாரநாதனை தரிசித்த நிறைவு.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; கோமதி, சென்னை; கதிரவன், அசோக் நகர்.

‘முகம் மறுமுகம்’ பகுதியில் சைக்கிளிங் சாம்பியன் ஆர்யாவின் அப் டு டேட் தகவல்கள் அபாரம்.
-விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; எஸ்.சுந்தர், திருநெல்வேலி; பிரேமா குரு, சென்னை; செம்மொழி, சேலையூர்; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; ஜெர்லின், ஆலந்தூர்; மனோகர், கோவை; வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பார்வையற்ற போதும் அறிவுக் கண்திறந்து படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாயுள்ள பிராஞ்சல் பாட்டீல் பற்றிய கட்டுரை பிரமிக்க வைத்தது.
- இராம.கண்ணன், திருநெல்வேலி; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; த.சத்தியநாராயணன், அயன்புரம்; கண்ணன் பாலு, மதுரை; என்.சண்முகம், திருவண்ணாமலை; குப்புசுவாமி, சங்கராபுரம்; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; மீ.அழகுமங்கை, அடையாறு; எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்; நடராஜன், திருநெல்வேலி.