நெடி



‘‘பேசாம கவுன்சிலிங் போயிட்டு வாயேன்...”
அகிலேஷ் விளையாட்டாகச் சொல்லவில்லை என்பது புரிந்தது. சமீபமாக நானே இதுபற்றி யோசித்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அவன் சொன்னதை கிண்டலேதும் செய்யாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தேன்.
‘‘உனக்கு யாரையாவது தெரியுமா?”

மிகத் தீர்க்கமான யோசனையில் இருக்கும்போது மனித முகங்கள் ஏன் இத்தனை கொடூரமாய் காட்சியளிக்கின்றன?!
என்னிடமிருந்து இந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த கோணலான நெற்றிச் சுழிப்பிலேயே தெரிந்தது. அவ்வளவு சீக்கிரம் ஆமோதித்து விட்டதை அவனால் நம்பமுடியவில்லை. ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள மறுபடி கேட்டால் ஒருவேளை என் முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்றிருந்தேன்.

‘‘ஆபீஸ் போற வழில ஏதோ நேம்போர்ட் பார்த்ததா ஞாபகம். நெட்ல வேணும்னா தேடிப்பார்ப்போமா?”
இவன் எதற்காக இத்தனை ஆர்வமாய் கேட்கிறான்? நான் தெளிவாய் இருக்கிறேனா என்பதில் குழப்பமாய் இருக்கிறானா? அல்லது என் குழப்பத்தைத் தெளிவுபடுத்த நினைக்கிறானா?‘‘நெட்ல வேணாம், நேம்போர்ட் பார்த்ததா சொன்னியே... நாளைக்கு நானும் வர்றேன். அப்படியே தேடிப்பாப்போம்...”
ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சரியென்பதாய் தலையாட்டினான். கவுன்சிலிங் என்றதும் கத்தி கூப்பாடு போடக்கூடும் என்று லவரமாகியிருந்தானோ என்னவோ.

தொடுதிரையை அழுத்தினேன். வீடியோ காலின் சிவப்புத் துண்டிப்பானை தாடையில் வைத்ததற்கு பதிலாய் நெற்றியில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இறந்தவர்கள் முகத்திற்கு வாகாய் பொருத்தப்படும் ஒரு ரூபாய் போல.சட்டென பொறி தட்டியவளாய், மொபைலுக்கும் ஸ்விட்ச் போர்டுக்கும் நடுவே சார்ஜர் வழி பாலத்தை ஏற்படுத்திவிட்டு, விறுவிறுவென டேபிள் ட்ராயரைத் திறந்தேன்.

குண்டூசி, நகவெட்டி, நூல்கண்டு, ஹேர்பின்... அவசரமாய் இழுத்ததில் டேபிளிலிருந்து பிய்த்துக்கொண்டு வந்த ட்ராயர்
நல்லவேளையாகத் தரையில் விழவில்லை. தலையணைக்கு அடியிலிருந்த பர்சைத் திறந்து சில்லறைகளை வெளியே கொட்டினேன். இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களும், ஒரு இரண்டு ரூபாய் நாணயமும் இருந்தன.

‘‘ச்சே!”
கொஞ்சம் சத்தமாகக் கத்திவிட்டது போலத்தான் இருந்தது. அகிலேஷை அழைக்கும் எண்ணத்தை உடனடியாகக் கைவிட்டேன். துரத்தும் எதனிடமிருந்தோ தப்பித்து ஓடிக்கொண்டிருந்தேன். கழுத்தோர வியர்வை பிசுபிசுத்தது. எழவெடுத்த காய்ன் எங்கதான் போகுமோ!மெதுமெதுவாய் விரல்கள் நடுங்க ஆரம்பித்தன.“ஹலோ... என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?”பின்னிருந்து வந்த பெண் குரலில் திடுக்கிட்டு, காதில் மாட்டியிருந்த ஸ்டெதஸ்கோப்பை அவசரமாய் வெளியே எடுத்தேன்.

சிரிக்க வேண்டுமா அல்லது ஸாரி சொல்ல வேண்டுமா என்பதில் எந்தக் குழப்பமுமின்றி லேசாய் சிரித்து வைத்தேன்.‘‘போய் வெளில உக்காருங்க, டாக்டர் வர்ற நேரம்...”வெளியேறியதுதான் தாமதம், அறைக்கதவை படாரென்று அடைத்தாள். அது சற்றுமுன் எனக்கு நானே திருட்டுத்தனமாய் கேட்டுக்கொண்டிருந்த இதயத்துடிப்பை ஒத்திருந்தது. அவுட் பேஷண்ட்கள் காத்திருக்கும் நாற்காலிக்குத் திரும்பி அகிலேஷைப் பார்த்தேன்.
‘‘சொன்னா கேக்குறியா?” என்று கிசுகிசுத்தான்.

‘‘ஒரு விஷயம் கவனிச்சியா?”
என்ன என்பதாய் புருவம் சுருக்கினான்.
‘‘என்ட்ரன்ஸ்ல வச்சிருந்த லெட்சுமி படம்...”
‘‘அதுக்கென்ன?”

‘‘அதோட கையில 25 பைசா காய்ன தலைகீழா ஒட்டி ப்ரேம் பண்ணியிருக்காங்க. எப்படியும் பதினஞ்சு இருபது வருஷம் இருக்கும்...”
‘‘உன் கண்ணுல மட்டும் இதெல்லாம் எப்படித்தான் படுமோ?”‘‘ஒருவேளை, பேஷண்ட்ஸ் நிறைய வரணும்னு ஏதாவது வாஸ்துவுக்கு பண்ணிருப்பாங்களோ?”எரிச்சலடைகிறான் என்பது அவன் நிமிர்ந்து உட்கார்ந்ததிலிருந்தே தெரிந்தது. அகிலேஷின் அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச கோபம் என்பது இப்படித்தான் இருக்கும். உடம்பை ஒருமுறை நிமிர்த்தி, மறுபடி சாய்ந்து வேறுபக்கம் பார்க்கிறான் எனில் ‘போதும் நிறுத்து’ என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் மறுபடி ஹாலின் அசைவுகளை நோட்டம் விட ஆரம்பித்தேன். என்னோடு சேர்த்து மொத்தம் மூன்று பேர் கவுன்சிலிங்கிற்கு வந்திருந்தார்கள். அதில் ஒருத்தி கல்லூரி மாணவியாக இருக்கலாம். உடன் வந்திருப்பது அவளுடைய அம்மாவும் அண்ணனும் என்று கணித்திருந்தேன். இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த இருவரும் கணவன் மனைவியாக இருக்கக்கூடும். மருத்துவமனையின் சூழல் அவர்களுக்கு ஒருவித அசௌகர்யத்தை ஏற்படுத்தியிருந்ததுபோல, இருவருமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

நடுவில், ‘வீட்டுக்குப் போகலாமா?’ என்று இரண்டு முறையும், ‘மணி என்ன?’ என்று ஒருமுறையும், ‘வந்துடுவார்’ என்று ஒருமுறையும் பேசிக்கொண்டனர்.‘‘என்ன பெருசா இருந்துடப்போகுது! அந்தப் பொண்ணுக்கு லவ் ஃபெய்லியரா இருக்கும். தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருப்பா. இந்த கேஸ்ல புருஷன் சந்தேகப்படுறவனா இருக்கும் அல்லது பொண்டாட்டி ஹிஸ்டீரியாவா இருக்கும்...”
ஆரூடம் சொல்லிவிட்டதுபோல் அகிலேஷின் பேச்சில் அத்தனை பெருமிதம்.

‘‘அவங்க பார்வைல நம்மளோட பிரச்னை என்னவா தெரிஞ்சிருக்கும்?” என்றேன். வாயை மூடிக்கொண்டான். எனக்கு மீண்டும் தலைகீழாய் தொங்கிக்கொண்டிருந்த நாணயத்தைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது.‘‘இதை ஏன் நீங்க அப்நார்மல்னு நினைக்கிறீங்க?”கேட்டவருக்கு முப்பத்தி ஐந்து வயதிருக்கலாம். இளம் மருத்துவர்கள் ஏன் இவ்வளவு சிகப்பாக இருக்கிறார்கள் என்கிற சந்தேகம் எப்போதும் போலவே இப்போதும் எழுந்தது. அவர் இன்னும் என் பதிலுக்காகக் காத்திருந்தார்.

‘‘மனநல மருத்துவருக்கு ஸ்டெதஸ்கோப் அவசியமா டாக்டர்? ஜஸ்ட் அட்வைஸ்தானே பண்றீங்க? இல்ல செக்கப்பும் செய்வீங்களா?”
திகைப்பை மறைத்துக்கொண்டு சன்னமாய் சிரித்தார். ‘‘சில நேரம் என்னை நானே பரிசோதிச்சுக்கத் தேவைப்படலாம் இல்லையா?”
‘‘எக்ஸாக்ட்லி...” என்றேன்.

அவரை ஏதோ கிண்டல் செய்வதாக உணர்ந்திருந்தார் போல, ஒருமுறை மூச்சை இழுத்து செருமினார். நான் தயாராகிக்கொண்டேன்.
‘‘மிஸ் தீப்தி, இப்பவும் அந்த காய்ன்ஸ் உங்ககிட்டதான் இருக்கு. இல்லையா?”
‘‘ம்ம்... எப்பவும்.”

‘‘நான் பார்க்கலாமா?”
மறுப்பதாக இடவலமாய் தலையாட்டினேன். எதிர்பார்த்தவர் போல எதையோ சொல்ல வாயெடுத்தார்.
‘‘ஏதாவது ஃபோபியா பேரை சொல்லப்போறீங்களா டாக்டர்? நெட்ல இல்லாத பேரா சொல்லுங்க ப்ளீஸ்!”
மறுபடியும் அதே சிரிப்பு, இம்முறை அவருடைய காதுகள் சிவந்திருந்தன.

‘‘சரி விஷயத்துக்கு வர்றேன். நீங்க சொன்னதை வச்சுப் பார்க்கும்போது...”நான் அவருடைய சிவந்த காதுகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். சண்முக வாத்தியார், காதில் நாணயத்தை லாவகமாய் சொருகுவது ஞாபகம் வந்தது. ஐம்பது காசு, ஒரு ரூபாய் என எந்த நாணயமானாலும் அவர் காதிற்கு அளவெடுத்து செய்தாற்போல அடங்கிப்போகும்.

ஆனால், இவருடைய காதிற்கு, வாசலில் பார்த்த இருபத்தி ஐந்து பைசா நாணயமே போதுமானதாய் இருக்குமென்று தோன்றியது. காதிற்கு காசு அல்லாமல், காசிற்கு காது எனும்பட்சத்தில், அதாவது ஒருவேளை அந்த 25 பைசாவை நிமிர்த்தமுடியாமல் போனால், இவருடைய காதினை தலைகீழாய் அதில் ஒட்டிவைக்க வேண்டியிருக்கும்.

இப்போது டாக்டர் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தார். அவர் சட்டைப் பையிலிருக்கும் சில்லறைக் காசுகள் தரையில் விழுந்துகொண்டிருந்தன.
‘‘இவ்ளோ நேரம் நான் பேசினதை நீங்க கவனிக்கலதானே?” டாக்டரின் குரல் எங்கோ தொலைவாய் கேட்டது.‘‘மணி 3:50 ஆனதும் சொல்றியா பாப்பா?”பேருந்திலிருந்து வெளியே வேடிக்கை பார்ப்பது கொஞ்சம் அலாதியாகத்தான் இருந்தது. அதிலும் என்ன வேண்டுமோ திட்டிக்கொள் என ஒருவரை கத்தவிட்டுவிட்டு பேருந்திலேறி அமர்ந்திருக்கும்போது.

‘‘பாப்பா...”
நிமிர்ந்தேன். நகராமல் அங்கேயே நின்றிருந்த குரல், தன்மீது கொஞ்சம் ஆல்கஹால் வாசனையைத் தெளித்திருந்தது.
‘‘3:50 ஆனதும் சொல்றியா?”முகம் சுளிக்கவோ, இடம் மாறவோ தோன்றாமல் அநிச்சையாய் மணிக்கட்டைப் பார்க்க, அது ‘3:35’ என்றது.
‘‘ம்...”கம்பியை வாகாய் பிடித்தபடி நின்றுகொண்டவர் முகத்தில் கொஞ்சம் பதற்றம் கூடியிருந்தது. கவுன்சிலிங்கிலிருந்து பாதியில் வெளியேறியபோது அகிலேஷ் கூட இப்படித்தான் பதறியிருந்தான்.

‘‘பஸ்ல போகணும் போல இருக்கு, கிளம்புறேன்...” என்றபடி திரும்பிப் பார்க்காமல் நடந்தபோது தலையிலடித்துக் கொண்டிருப்பான்.
மனிதர்களைவிட்டு வெளியேறுவது கொஞ்சம் ஆசுவாசமாகத்தான் இருக்கிறது. அதிலும் இறுக்கிப்பிடித்திருந்த மனிதர்களை.

‘‘3:50 ஆகிடுச்சா பாப்பா?”கண்டக்டரின் சில்லறைகள் மீது வெறித்திருந்த பார்வையை வலுக்கட்டாயமாகத் திருப்பியபடி ‘‘இன்னுமில்ல...” என்றேன்.
சரி என்பதுபோல் மறுபடி காத்திருக்க ஆரம்பித்தவரை அப்போதுதான் கவனித்தேன். சட்டைப் பொத்தானை வரிசை மாற்றிப் போட்டிருந்தவர், தலையை படிய வாரியிருந்தார். அடிக்கடி குனிந்து பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியின் வழியாய் சாலையை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவேளை அவசரகதியாய் எங்காவது போய்க்கொண்டிருக்கலாம் அல்லது அவரது சுபாவமே அதுவாக இருக்கலாம். கண்களும் கால்களும், அது முந்தைய இரவுக்கு ஏற்றிக்கொண்ட போதையின் நெடி என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

சட்டைப் பாக்கெட்டின் ஓரம் லேசாய் தையல் பிரிந்து எடையின்றி காணப்பட்டதால், தன் சில்லறைகளை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருப்பார் என யூகித்துக்கொண்டேன்.மீண்டும் என்னிடம் திரும்பினார், நான் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ‘‘3:45” என்றேன். அதோடு இன்னும் ஐந்து நிமிடத்தில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எழுந்தது.

‘3:50க்கு தினமும் போட வேண்டிய மாத்திரையை போட்டுக்கொள்வாராக இருக்கும்...’ என்பது முதல் ‘சரியாக 3:50க்கு வெடிக்க வைப்பதற்கான ரிமோட்டைக் கையில் வைத்திருப்பாராக இருக்கும்’ என்பது வரை கற்பனைக் குதிரை கதை சொல்லிக்கொண்டிருந்தது.

நிமிர்ந்து ‘‘3:50...” என்றேன்.அதுவரையிருந்த பதற்றம் நீங்கியவராக, கண்களை நன்கு மூடித்திறந்தார். நானோ அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். சில நொடிகள்தான். பிறகு பழைய நிலைக்குத் திரும்பியதுபோல் ‘‘தேங்க்ஸ் பாப்பா...” என்றார்.பேரழிவொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு அது பெருத்த ஏமாற்றமாக இருந்தது.இன்னமும் அவரையே கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்பது உந்தியிருக்க வேண்டும், சன்னமான குரலில் தலைதாழ்த்தி, “பொஞ்சாதி தவறின நேரம் பாப்பா. தினமும் அந்த நேரத்துல நெனச்சுப்பேன்...” என்றார்.

‘‘இதென்ன பைத்தியக்காரத்தனம்? அதையேன் வலுக்கட்டாயமா…”
விழுங்கிக்கொண்டேன். கண்டக்டர் விசில் ஊதவும் அவர் இறங்குவதற்கு ஆயத்தமாகவும் சரியாக இருந்தது.

அகிலேஷ் நான்காவது முறையாக அழைத்திருந்தான்.எக்காரணம் கொண்டும் திரும்பிப்பார்க்கக் கூடாது என்கிற எண்ணத்தைக் கைவிட்டபடி பேருந்திலிருந்து எட்டிப் பார்த்தேன். சாலையைக் கடந்து கொண்டிருந்தார். கைப்பையைத் திறந்து, அம்மா கடைசியாய் அஞ்சறைப் பெட்டிக்குள் எனக்காக வைத்திருந்த சில்லறைகளை மீண்டுமொருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். குப்பென நாசிக்குள் ஆல்கஹால் நெடி ஏறியது.

அசுரன் வெங்கடேஷ்!

இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், கசியும் தகவல்கள் அனைத்தும் நம்பகமானவை என்பதால் பதிவு செய்வதும் அவசியம்!
யெஸ். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற... தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு... இந்தியின் மோஸ்ட் வாண்டட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் உட்பட செப்பு மொழி பதினெட்டுடையாளைச் சேர்ந்த அனைத்து திரையுலக ஜாம்பவான்களும் ஆஹோ ஓஹோ என கொண்டாடும் ‘அசுரன்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது!இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறலாம் என அனைவரும் ஆரூடம் சொல்லும் அளவுக்கு அப்படத்தில் வெளுத்து வாங்கிய தனுஷின் கேரக்டரில் வெங்கடேஷ் அங்கு நடிக்கப் போகிறார்!

32 - 27 - 17

இந்தப் படம்தான் இணையத்தில் இப்போது வைரல்! பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் ‘தபங் 3’ படத்தில் நடித்து வருகிறார். ‘தபங்’ சீரிஸ் படி இந்தப் படத்திலும் சல்மான் கானுக்கு ஜோடி சோனாக்‌ஷி சின்ஹாதான். ஆனால், படத்தில் இளம் வயது சல்லு பாய் போர்ஷனில் அவரது காதலியாக நடிக்கிறார் சாலி என்கிற குஷி.

தேசிய விருது பெற்ற நடிகரான மகேஷ் மஞ்ச்ரேக்கரின் மகளான இந்த குஷிக்கும் சல்மான் கானுக்கும் நிஜத்தில் 32 வயது வித்தியாசமாம்!
தன் மகள் (பேத்தி?!) வயது உள்ளவருடன் சல்லு பாய் ஜோடி சேரலாமா என பலரும் நரம்பு புடைக்க சவுண்டு விடுகிறார்கள். இதற்கு சல்மான் தரப்பில்,  ஏற்கனவே தன்னை விட 27 வயது குறைந்த அனுஷ்கா சர்மாவுடன் ‘சுல்தான்’ படத்திலும்; 17 வயது குறைந்த ஸ்நேகா உல்லாலுடன் ‘லக்கி’ படத்திலும் சல்மான் கான் ஜோடி சேர்ந்திருக்கிறார் என காலரை உயர்த்துகிறார்கள்!

ரைட்டு!

வெறும் அறிவிப்புடன் நின்றுவிட்டதா அல்லது டேக் ஆஃப் ஆகிறதா..?
‘இந்தியன் 2’ குறித்து பலர் மனதிலும் இருக்கும் கேள்வி இதுதான். இதற்கான விடையாக இணையத்தில் இந்தப் படம் வெளியாகி பெரும் பர
பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

போபாலில் நடைபெற்று வரும் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த யாரோ ஒரு புண்ணியவான் இந்தப் படத்தை தன் செல்போன் கேமராவில் எடுத்து சுற்றுக்கு விட்டிருக்கிறார். அதுவும் ‘பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் அசத்தலான ஆக்‌ஷன் ப்ளாக்கை கன்சீவ் செய்திருக்கிறார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் மத்தியில் படமாக்கப்பட்ட இக்காட்சியைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்...’ என்ற குறிப்புடன்!

யெஸ்... அவரேதான்!

கிள்ளி எல்லாம் பார்க்க வேண்டாம். அவரேதான். சிம்ரனுக்கு அடுத்து தன் இடுப்புக்காக இளசுகளின் தூக்கத்தை கெடுத்தாரே... அதே இலியானாதான் இங்கிருப்பவர். கனவுலக நாயகியாக வலம் வந்தபோதே காதலில் சிக்கினார்... காதலனுடன் கசிந்து உருகினார். விளைவு, இடுப்பு அவருக்கு டாட்டா காட்டிவிட்டுப் அகன்றது.  ஒரு கட்டத்தில் அக்காதல் பிரேக் அப் ஆக... காதலனை விட்டுப் பிரிந்தார். அதன் பிறகு இலியானா செய்த முதல் காரியம்,
கோவித்துக்கொண்டு தன்னை விட்டுச் சென்ற தன் இடுப்பை மீண்டும் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்ததுதான்! விளைவு, இந்த போட்டோ!

இந்திரா த/பெ ராஜமாணிக்கம்