அடுக்குமாடி காடு!



‘‘இன்னும் பத்து வருடங்களில் மூன்றில் இருவர் நகரத்தில் வசிப்பார்கள்...’’ என்கிறது வேர்ல்டு சிட்டிஸ் ரிப்போர்ட்.

இந்நிலையில் எதிர்காலத்தில் நகரங்களில் காடுகளை எப்படி வடிவமைக்கலாம் அல்லது நகரங்களில் காடுகள் எப்படியிருக்கும் என்பதற்கான ஒரு ப்ளூ ப்ரிண்ட்டை அச்சடித்துத் தருகிறது இத்தாலியின் மிலன் நகரில் வீற்றிருக்கும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள். ஒன்றின் உயரம் 111 மீட்டர். இன்னொன்று 76 மீட்டர் உயரம். இரண்டின் பால்கனிகளையும், வெட்ட வெளியையும் 900 மரங்களும், 11 ஆயிரம் செடிகளும், 5 ஆயிரம் புதர்ச்செடிகளும் அலங்கரிக்கின்றன!

இந்த இரு கட்டடங்களையும் செங்குத்தான காடு அல்லது அடுக்குமாடி காடு என்றே அழைக்கின்றனர். ஐந்து வருடங்களுக்கு முன்பு அஸ்திவாரம் இடப்பட்ட இந்தக் காட்டுக்கு இப்போது பறவைகள் கூட்டமாக வருகின்றன. காற்று மாசுபாடு குறைந்திருக்கிறது. தவிர வெப்ப நிலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அங்கே குடியிருப்பவர்கள் சொல்கிறார்கள்.

த.சக்திவேல்