ஸ்ருதிஹாசன் Exclusive இரண்டு வருட பிரேக் ஏன்?
கலர்ஃபுல்லான ஃபெஸ்டிவல் சீஸனுக்குப் பிறகும், மங்களகரமாக ஜொலிக்கிறார் ஸ்ருதிஹாசன். ‘சிங்கம் 3’க்குப் பிறகு கோலிவுட்டில் சிலுசிலுக்காமல் இருந்தவர், விஜய்சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் மூலம் ஃப்ரெஷ் எனர்ஜியுடன் புது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். தெலுங்கிலும் ரவிதேஜாவின் ‘க்ராக்’கில் கிறுகிறுக்கிறார். தமிழ்ல ஏன் இவ்ளோ பெரிய இடைவெளி?
 தமிழ்ல மட்டுமில்ல. இந்தி, தெலுங்குனு எல்லா மொழிகள்லயுமே நடிக்கறதுக்கு ஒரு சின்ன பிரேக் எடுத்தேன். அதை பிரேக்னு சொல்றதை விட, என்னை நானே புதுப்பிக்க, என் தனித்திறமையை நிரூபிக்க ஒரு டைம் தேவையா இருந்துச்சு. நான் மியூசிக்ல இறங்கி பத்து வருஷங்களாகப் போகுது. எனக்கு கவிதைகள் நல்லா எழுத வரும்.
பாதிச்ச எமோஷனலான விஷயங்களை ஆங்கிலத்துல எழுதுவேன்; எழுதிட்டிருக்கேன். தமிழ், தெலுங்கு, இந்தில நல்லா பாட வரும். ஆங்கிலத்தைத் தவிர மத்த லாங்குவேஜ்ல லிரிக்ஸ் எழுதினதில்ல. ஃப்ரெண்ட்ஸுக்கு என் மியூசிக் ரொம்ப பிடிக்கும். அவங்க என்னை பார்க்கும் போதெல்லாம், ‘மியூசிக் ஷோ பக்கம் நீ கவனமே செலுத்த மாட்டேங்கற’னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.
எனக்கு ரொம்பவும் பிடிச்ச லண்டன்ல மியூசிக்ல பெயரெடுக்கணும்னு ஆசை. அங்க உள்ள ஆடியன்ஸுக்கு ஸ்ருதிஹாசன், ஸ்ருதின்னா தெரியாது. அவங்களைப் பொறுத்தவரை நான் புதுமுகம்தான். அந்த புது ஆடியன்ஸ்கிட்ட என் மியூசிக் டேலண்ட்டை வெளிப்படுத்த நினைச்சேன். உடனே, ‘உன் சினிமா கரியர் நல்லாத்தானே போயிட்டிருக்கு? ஏன் இந்த எக்ஸ்ட்ரா வேலை’னு கேட்கத் தோணும்.
ஆனா, மத்தவங்களுக்காக வாழ முடியாதே! இசைதான் என் உலகம். என் ஆத்ம திருப்திக்கான விஷயம் இசைலதான் இருக்கு. ஒரே படத்துல மொத்த திறமையையும் வெளிப்படுத்த முடியாதில்லையா..? அப்படி இசைல என்னை நிரூபிக்க கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு. தவிர, சினிமாலயும் ஆக்ட்டிங்ல அடுத்த கட்டத்துக்கு நகர நினைச்சேன்.
ஸோ, எல்லாத்தையும் சரி செய்து என்னை நானே ரீ ஸ்ட்ரக்சர் செய்துக்க சில காலம் தேவைப்பட்டுச்சு.தெரியாத இடத்துக்கு போய் நம்ம டேலண்ட்டை நிரூபிக்கறது சவால்தான். இதை உணர்ந்தே மியூசிக் ஷோ பண்ண ஆரம்பிச்சேன். லண்டன்ல மியூசிக்ல பெயர் வாங்கணும்னா அங்க கொஞ்ச காலம் தங்கி உழைக்கணும். இதுக்கெல்லாம் நேரம் தேவைப்பட்டதால நடிப்புக்கு பிரேக் விட்டேன்.
இப்ப ஃப்ரெஷ் எனர்ஜியோட வந்திருக்கேன். வருஷத்துக்கு ரெண்டு படங்கள் நடிச்சாக் கூட நூறு சதவிகிதம் எனர்ஜியா நடிக்க முடியும்னு நம்பிக்கை பிறந்திருக்கு. லண்டன்லயும் என் மியூசிக் பேண்ட் வெளிய தெரிய ஆரம்பிச்சிருக்கு. ஆங்கிலம் தவிர தமிழ், இந்திலயும் பாட ஆரம்பிச்சிருக்கேன். நம்ம கலாசாரத்தை என் கவிதை வழியா கொண்டு போறேன். லைட்டா பெருமையா இருக்கு! எப்படி போச்சு 2019?
நல்லா இருந்துச்சு. ‘ஃப்ரோஸன் 2’க்கு டப்பிங் பேசினேன். வருஷம் முழுதும் பிசியா இருந்தேன். 2020 தொடக்கத்துல ஷூட்டிங்ல இருந்தேன். அநேகமா இந்த வருஷமும் பிசியா இருப்பேன்!புது வருஷத்துல ரெசல்யூஷன் எடுக்கற பழக்கம் எனக்கு கிடையாது. எப்பவும் ஒர்க் பண்ணணும். ஹெல்த்தியா இருக்கணும்னு மட்டும் நினைப்பேன். அதை நோக்கியே ஓடிக்கிட்டு இருக்கேன். ‘லாபம்’ல ஸ்ருதி எப்படி..?
விஜய்சேதுபதி சாரோட ஒர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட ஒரு படம் நடிக்கணும்னு விரும்பினேன். அதுக்கான வாய்ப்பு ‘லாபம்’ல அமைஞ்சது. கதையை ஜனநாதன் சார் சொன்னதும், ஹேப்பியாகிட்டேன். சோஷியல் அவேர்னஸ் ஸ்டோரி. போரடிக்காம போகக்கூடிய ஸ்கிரிப்ட். ஷூட்டிங் எக்ஸ்பீரியன்ஸ் நல்லா இருந்தது.
ஜனா சார் மனிதர்களை நேசிக்கறவர். யூனிட்ல உள்ள அத்தனை பேரையும் ஒரேவிதமா ட்ரீட் பண்றார். அமைதியா இருப்பார். க்ளீயர்கட்டாகவும் இருப்பார். பெண்களை எப்படி மதிக்கணும்... பாராட்டணும்... சினிமால பெண்களை எப்படி மரியாதையா ட்ரீட் பண்ணணும்... இதையெல்லாம் கத்துக் கொடுக்கறது சிரமமானது.
ஆனா, ஜனா சார்கிட்ட இவையெல்லாம் இயல்பா இருக்கு. பெண்களை மதிப்பும் மரியாதையுமா பார்க்கறார். நமக்கான சுதந்திரத்தை கொடுக்கறார். அவர்கிட்ட எதைப்பத்தியும் விவாதிக்கலாம். திறமைமிக்க இயக்குநர். ரொம்ப நாலெஜபிள் பர்சன். ஒவ்வொரு ஃபிரேமையும் அழகா செதுக்கறார். அவர் டென்ஷனா கத்தி நான் பார்த்ததேயில்ல.
‘லாபம்’ விஜய்சேதுபதி சாரோட புரொடக்ஷன். எல்லாரையும் அவ்வளவு ஹேப்பியா வைச்சுக்கறாங்க. பார்த்துப் பார்த்து கவனிக்கறாங்க. விஜய்சேதுபதி சார், அப்பாவோட ரசிகர். அதனால அப்பாவைப் பத்தி கேட்டு தெரிஞ்சுக்கறார். நைஸ் அண்ட் ஸ்வீட் பர்சன். ஷார்ட் ஃபிலிம்ல நடிக்கிறீங்களாமே..?
யெஸ். ‘தேவி’னு ஒரு ஷார்ட் ஃபிலிம். மும்பைல நிரஞ்சன் அய்யங்கார்னு எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கார். அவர் டைரக்ஷன், தயாரிப்புல இறங்கியிருக்கார். ‘ஸ்ருதி, நான் புது ஐடியா ஒண்ணுகேட்டேன். அதை ஷார்ட் ஃபிலிமா பண்ணப் போறாங்க. நடிக்கிறீயா’னு கேட்டார்.
பெண்களை மையப்படுத்தும் கதை. பெண்களை இயல்பா காட்டக்கூடிய ஸ்கிரிப்ட். ‘மின்சாரக் கனவு’ கஜோல் மேம் உட்பட நிறைய பெண்கள் நடிச்சிருக்காங்க.
கஜோல் மேம் ரசிகை நான். அவங்க கூட நடிக்கறதுனா சும்மாவா..? சந்தோஷமா நடிச்சுக் கொடுத்தேன். படத்துல மராத்தி தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஒன்பது பெண்கள் நடிச்சிருக்காங்க. பின்னி எடுத்திருக்காங்க. இந்த குறும்படத்துக்கு மொழி அவசியமில்ல. யூனிவர்சல் எமோஷன்ஸும், பவர்ஃபுல் மெசேஜும் அதுல இருக்கு. வர்ற மார்ச் 8, மகளிர் தினத்தப்ப இதை ரிலீஸ் பண்றாங்க!
மை.பாரதிராஜா
|