நியூஸ் சாண்ட்விச்



ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படம்?

இந்தோனேஷியாவில் 20,000 பண நோட்டுகளில் இந்து கடவுள் விநாயகரின் படம் அச்சிடப்பட்டிருக்கும். ஒரு பேட்டியின் போது, பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் ‘இந்தோனேஷியா போல, நம் நாட்டு ரூபாய் நோட்டுகளில் கடவுளின் படங்களை அச்சிட வேண்டுமென்றால் எந்த கடவுளை நீங்கள் தேர்வு செய்வீர்கள்’ என ஒரு நிருபர் கேட்டார். ‘லட்சுமி!’ என உடனே பதிலளித்திருக்கிறார் சு.சாமி!

செவ்வாய் கிரகத்தில் 10 லட்ச மக்களுடன் அழகிய நகரம்!

உலகின் பிரபலமான தொழில்நுட்ப தொழிலதிபர் எலன் மஸ்க், இப்போது 1000 விண்கலங்களைத் தயாரிக்கும் பணியில் இருக்கிறார்.
இதன் மூலம், 2050க்குள், 10 லட்சம் மக்களை விண்வெளியில் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
அங்கு ஓர் அழகிய நகரத்தை உருவாக்கி, இந்த சேவை மக்கள் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் எளிதாக்கவும் முடிவெடுத்துள்ளார்.
இச்செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட எலன் மஸ்க், இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியும் வருகிறார்.
     
ஸ்வேதா கண்ணன்