வெண்கல சிற்பி!
ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் உள்ள ஒரு நவீன வகைமை ஹைப்பர் ரியலிஸம். அதிக ரெசல்யூசன் கொண்ட ஓவியம் மற்றும் சிற்பங்கள் இந்த வகைமைக்குள் அடங்கும்.
இதில் உலகளவில் புகழ்பெற்ற சிற்பி, ஓவியர், வீடியோ ஆர்ட்டிஸ்ட் என பன்முகங்களுக்குச் சொந்தக்காரர் கரோல் பியூயர்மேன். வெண்கலம், கோந்து, மார்பிளில் இவர் செதுக்கிய சிற்பங்கள் உலகப்பிரபலம். அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பெண்மணி 40 வருடங்களாக ஓயாமல் சிற்பம் வடித்துவருகிறார். இவரது வெண்கலச் சிற்பங்கள் புதுவிதமான பாய்ச்சலை சிற்பக் கலையில் நிகழ்த்தியுள்ளது. மனித உருவங்கள், நினைவுச் சின்னங்களைத்தான் அதிகமாக இவர் சிற்பமாக்குகிறார். ஒவ்வொரு சிற்பமும் பல லட்சங்களில் ஏலம் போகிறது. மினியேச்சரிலும் கலக்குகிறார். இவரது சிற்பங்களைப் பார்ப்பவர்கள் உண்மையென்று நம்பிவிடுகின்றனர், தொட்டுப் பார்த்த பிறகே அது சிற்பம் என்று ஆச்சர்யமடைகின்றனர்.
த.சக்திவேல்
|