சிம்புவின் நட்புக்கு எல்லை இல்லை...



சமீபத்துல சிம்புவோட படம் போட்ட பிரமாண்ட போஸ்டர்கள் தமிழ்நாட்டையே கலக்குச்சு. 'எஸ்.டி.ஆரின் நட்புக்கு நன்றி...’ன்னு அச்சிட்டிருந்த போஸ்டர்கள்ல அவர் பாடிக்கிட்டிருக்கும் படம் இருந்தது. அது சித்தார்த், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிச்சிருக்க ‘ஸ்ரீதர்’ பட போஸ்டர். படத்துல எஸ்.டி.ஆர் ஒரு பாட்டு பாடியிருக்கார்னு தெரிஞ்சது. அதுக்கு அவர் நடிக்கிற படம் போலவே போஸ்டர் அடிச்சு பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடிக்கணுமான்னு தோண, புரட்யூசர் தேவிஸ்ரீதேவி சதீஷ்கிட்ட கேட்டேன். ‘‘அது சிம்புவுக்கு நான் பட்ட நன்றிக்கடனுக்காக. இந்தப் படத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனா இந்தப் படத்துல வர்ற நட்புக்கான பாடலை அவர் பாடினா நல்லா இருக்கும்னு தோண, அவர்கிட்ட இருக்கிற நட்பில கேட்டேன். ‘உங்களுக்காக பாடறேன் சதீஷ்...’ன்னவர் ஆடியோ ரிலீசாக விருக்க அவசரம் தெரிஞ்சு ஷூட்டிங் பிஸிக்கு இடையில வந்து பாடிக் கொடுத்துட்டுப் போனார். சொன்னா நம்ப மாட்டீங்க. அதுக்கு சம்பளமா ஒரு பைசா வாங்கலை. அதுக்கு வார்த்தையால சொன்ன நன்றி பத்தாதுன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டினேன். ‘நட்புக்கில்லை எல்லை...’ங்கிற அந்த ஹிட் பாட்டு ஒவ்வொரு தடவை காதுல விழும்போதும் நான் அவரோட நட்பைத்தான் நினைச்சுக்கிறேன்...’’னார். நல்ல ‘சிச்சுவேஷன் சாங்’தான்..!

பல மேடைகள்ல ஃபேஷன் ஷோ நடக்குது. ஆனா சிலது ஸ்பெஷல். அதுல ஒண்ணு போன வாரம் ‘நெஃபர்டரி’ நிறுவனம் நடத்திய ஃபேஷன் ஷோ. மும்பை மாடல்களோட ஜீவா, ஆர்யா, சித்தார்த், பார்வதி ஓமணக்குட்டன், சோனியா அகர்வால், தப்ஸி, பூஜா ஹெக்டேன்னு சினிமா ஸ்டார்களும் கேட்வாக் பண்ணியதுல அமளிதுமளியா நடந்துச்சு ஃபங்ஷன். விஷயம் இதுதான்... ‘நெஃபர்டரி’ங்கிறது கிளவுட் நைன் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியோட மனைவி அனுஷா தயாநிதி தொடங்கியிருக்க ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம். அதோட ஆரம்ப விழாதான் ஸ்டார் நைட்டா மாறிப்போச்சு. இந்த இனாகுரேஷன் ஈவன்ட்ல கலெக்ட் ஆகற தொகையை ‘அர்விந்த் பவுண்டேஷன்’ங்கிற டவுண் சிண்ட்ரோம், ஆட்டிசம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான அமைப்புக்கு நன்கொடையா தர இருக்காங்களாம்.

‘நெஃபர்டரி’ங்கறது ஒரு அழகிய எகிப்திய அரசியோட பேர்! போன வாரம் ரிலீசான படம் ‘பச்சை என்கிற காத்து’. சும்மா சொல்லக்கூடாது. இந்த மண்ணில எங்கோ நடந்த கதையை உயிரோவியமா கொடுத்திருந்தார் டைரக்டர் கீரா. கேள்விப்பட்ட பெயர், மண் வாசனைக் கதை, இடைவேளைக்கு ‘புற வேளை’ன்னு கார்டு போட்டது, ஹீரோவோட பெயர் வாசகர், ஹீரோயினோட பெயர் தேவதைன்னு இருந்ததெல்லாம் ஏதோ செய்தி சொல்ல... படம் முடிஞ்சு கீரா கிட்ட பேசினேன். ‘‘விவசாயக் குடும்பத்துல பிறந்தவன். சிறுகதைகள் எழுதியிருக்கேன். அதைப் படிச்சுட்டு தங்கர் பச்சான் என்னை உதவியாளரா சேத்துக்கிட்டார். நான் இயக்கிய ‘தமிழு’ குறும்படம் மூணு விருதுகள் வாங்கிச்சு. கிடைச்ச வாய்ப்பை வச்சு செய்த படம்தான் இது...’’ன்னார். ‘‘ஹீரோ வாசகர் யார்ங்க... அசத்தியிருக்காரே?’’ன்னா, ‘‘அவர் நடிகர் இல்லை. அசிஸ்டன்ட் டைரக்டர். கதை விவாதத்தப்ப அவர் பேசிய உடல்மொழியை கவனிச்சு அவரையே நடிக்க வச்சேன். தேவதை மட்டும் கேரள வரவு...’’ன்னார். ‘‘படத்தோட பிரசன்டேஷன் ஒரு ஆவணப்படம் போல இருந்ததுதான் ஒரே குறை...’’ன்னதை ஒத்துக்கிட்டவர், ‘‘பல சிரமங்களுக்கு இடையில ரிலீஸ் பண்ணினோம். இன்னும் வசதிகள் கிடைக்கும்போது இதுல இருக்கிற குறைகளை நேர் பண்ணமுடியும்...’’னார். சுத்தத் தமிழிலேயே பேசற கீராவுக்கு ஆங்கிலம் மேல அத்தனை வெறுப்பு. ஒரு வார்த்தை கூட இங்கிலீஷ்ல பேசவோ படிக்கவோ மாட்டாராம். வந்தனம் ஐயா..!