* மனைவி சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்னு போன்ல சொன்னா, மனைவி சைடுல இருந்து ஒரு சர்க்கஸ் கும்பலே வந்திருக்குன்னு அர்த்தம்.
* மனைவி ஆசையா ‘இத டேஸ்ட் பண்ணிப் பாருங்க’ன்னு சொன்னா, அந்த பலகாரத்த அப்போதான் செஞ்சு பழகறாங்கன்னு அர்த்தம்.
* மனைவி தலை வலிக்குதுன்னு சொன்னா, ‘ஏன்டா நாயே... அந்த டிவிய ஆஃப் பண்ண மாட்டியா’ன்னு அர்த்தம்
* மனைவி ‘இன்னைக்கு ஆபீசுக்கு லீவு போடுங்க’ன்னு ஆசையா சொன்னா, வீட்ட ஒட்டடை அடிக்கணுமுன்னு அர்த்தம்.
* மனைவி கை காலெல்லாம் வலிக்குதுன்னு சொன்னா, ‘நீயே தோசை ஊத்தி சாப்பிடு’ன்னு அர்த்தம்.
* மனைவி ‘அப்பன் புத்தி அப்படியே இருக் கு’ன்னு குழந்தைய திட்டுனா, குழந்த ஏதோ கோல்மால் பண்ணிட்டு நிக்குதுன்னு அர்த்தம்.
* மனைவி பீரோவுல இருக்கிற புடவையை எல்லாம் பெட்டு மேல எடுத்து வச்சிருந்தா, ஈவ்னிங் எங்கோ ஃபங்ஷன் போறாங்கன்னு அர்த்தம்.
* மனைவி தொடர்ந்து ஒரு வாரம் பாசமா இருந்தா, கல்யாண நாள் நெருங்கிடுச்சுன்னு அர்த்தம்.
* மனைவி மூணு நாள் தொடர்ந்து ரசமும் அப்பளமும் சாப்பிட வைத்தால், மாமியாரோட சண்டைன்னு அர்த்தம்.
* மனைவி ‘பரவாயில்லை’ன்னு சொன் னா, இதுக்கு மேல உன்கிட்ட எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்றாங்கன்னு அர்த்தம்.
* மனைவி ‘உங்களுக்கு எதுக்கு சிரமம்’னு சொன்னா, நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்னு அர்த்தம்.
* மனைவி நைட்டு மூணு மணி வரை தூங்காம இருந்தா, பக்கத்து வீட்டுக்காரம்மா புது நகை வாங்கி இருக்குன்னு அர்த்தம்.
* மனைவி தன் தோழிகளோடு குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருந்தா, ஏதோ ஒரு பொம்பளைய திட்டிக்கிட்டு இருக்காங்கன்னு அர்த்தம்.
புரிஞ்சுக்கோங்க புருஷன்மார்களே, புத்தியோட பொழச்சுக்கோங்க...