பிச்சைக்காரர்களின் டாக்டர்!புனேவைச் சேர்ந்த டாக்டர் அபிஜித் சோனவானே கோயில் வாசல்களிலுள்ள மனநிலை பிறழ்ந்த, வயது முதிர்ந்தவர்களுக்கு இலவச  சிகிச்சையளிப்பதை காலையில் முதல் பணியாக மேற்கொள்கிறார்.

நோய் தீவிரமானவர்களை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து தன் செலவில் மருந்துகளை வாங்கிக் கொடுக்கிறார். தன் சோஹம் ட்ரஸ்ட்  மூலம் திங்கள் முதல் சனி வரை வாரம்தோறும் காலை பத்துமணி முதல் மூன்று மணிவரை ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கிறார் அபிஜித்  சோனவானே. ‘‘கோயில்களில் பிச்சையெடுப்பவர்களில் பெரும்பாலோர் குடும்பங்களால் கைவிடப்பட்டவர்கள். வயிற்றுப்பசிக்கு வேறுவழியின்றி பிச்சை  எடுக்கிறார்கள்...’’ என்று சொல்லும் அபிஜித் கடந்த இரு வருடங்களாக இப்பணியை ஏழைகளுக்கு செய்து வருகிறார்.

ரோனி