சிம்லாவில் தண்ணீர் இல்லை!
இந்தியாவின் சூப்பர் சுற்றுலாத்தலமான சிம்லாவிலும் வந்துவிட்டது தண்ணீர் பஞ்சம். ஒருவாரமாக நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டினால் அங்கு தங்க திட்டமிட்ட சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.
‘‘சிம்லா முனிசிபாலிட்டி தண்ணீரை சரியாக விநியோகிக்காததால்தான் இப்பிரச்னை. அனைத்து ஹோட்டல்களும் வெளியே காசு கொடுத்து நீர் வாங்குவது எப்படி சாத்தியம்?’’ என கேள்வி எழுப்புகிறார் ஹோட்டல் சங்கத்தலைவர் மொகிந்தர் சேத். கும்மாகிர அஸ்வினி காட், சூரத் மற்றும் சியோக் ஆகிய நீராதாரங்களின் திறன் தினசரி 65 மில்லியன் லிட்டர்கள்.
இப்போது நீருக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் உள்ளூர் மக்கள் வேறுவழியின்றி தனியாரின் டேங்கர் நீரை க்யூவில் நின்று காசு கொடுத்து வாங்கி வருகின்றனர். சிம்லாவை மூன்று பகுதியாகப் பிரித்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை நகரங்களுக்கு நீர்தர சிம்லா முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.
ரோனி
|