நோன்பை கடந்த மனிதநேயம்!
பீகாரைச் சேர்ந்த முஸ்லீம் வாலிபர், ரம்ஜான் நோன்பையும் புறக்கணித்து குழந்தைக்கு ரத்த தானம் செய்தது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கோபல்கன்ஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாவேத் ஆலம். ரம்ஜான் நோன்பையும் புறக்கணித்து தாலசீமியாவால் பாதிக்கப்பட்ட இந்து சிறுவன் ராஜேஷ்குமாருக்கு ரத்தம் அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். தாலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ஒருமுறை ரத்தம் மாற்றுவது அவசியம். ரத்தம் மாற்றவேண்டிய நாளில் ரத்த வங்கியில் ராஜேஷுக்கு ரத்தம் கிடைக்கவில்லை.
200 கி.மீ. தூரம் ராஜேஷின் தந்தை சென்று ரத்த வங்கிகளை அணுகியும் பொருத்தமான ரத்த வகை கிடைக்கவில்லை. அப்போது அறிமுகமான ரத்ததான இயக்க உறுப்பினரான அன்வரின் உதவியுடன் ரம்ஜான் நோன்பிலிருந்த ஜாவேத் ஆலம், நோன்பைக் கைவிட்டு ராஜேஷுக்கு ரத்தம் அளித்து மனிதநேய நாயகனாகியுள்ளார்.
ரோனி
|