வலைப்பேச்சு



@Janardhanan11 - கல்யாணம் ஆன காலத்துல இருந்து என் போன் டேப் ஆயிட்டுதான் இருக்கு. எத்தனையோ நாள் போட்ட சரக்கு ப்ளான் எல்லாம் மாட்டி, அதை சமாளிச்சு... தக்காலி, இதுல இவனுங்க வேற ஏதோ பெருசா ராணுவ ரகசியத்தை ஒட்டு கேட்டுட்ட மாதிரி!

@talksstweet - உலகமே நம்மள புத்திசாலினு ஒத்துக்கிட்டாலும் ஒருத்தி மட்டும் ஒத்துக்கவே மாட்டா... அவதான் மாமியா..!

@CIassyIntrovert - நாம இல்லனா கம்பெனி நடத்த முடியாது, நாம இல்லனா இவளுக்கு / இவனுக்கு இன்னொருத்தங்க கிடைக்கமாட்டாங்கனு நம்புறதெல்லாம் அதீத ஓவர் கான்ஃபி டென்ஸ். யார் போனாலும் ரிப்ளேஸ்மெண்ட் உண்டு இங்க.

@aadiraaadi - சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைப்பதே சிறு வயதின் ஆகப்பெரிய மூட நம்பிக்கை!

@GreeseDabba2 - காய்கறி வாங்கும்போது மொத்தமா அள்ளி கூடையில போடாம, ஒவ்வொண்ணா செக் பண்ணி எடுத்து போடற மாதிரி நடிச்சா, பக்கத்துல நிக்கற ஆண்டீஸ் நம்ம திறமையைப் பத்தி உயர்வா எடை போட வாய்ப்பு இருக்கு.

@Lifeof_Ram - கைல பணம் இருக்குறது போல ஒரு சந்தோசம் வருமானு கேட்டா வராது...

@prabhu65290 - அடிக்கடி சாராயம் குடித்து பழகியவர்களின் மனநிலையும்; அடிக்கடி தற்பெருமை பேசிப் பழகியவர்களின் மனநிலையும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருக்கும். அடிமைத்தனத்துடன்.

@saysatheesh - எவரோடும் இறக்கி வைக்க முடியா துயரங்களை தூக்கி சுமந்து கொண்டே இருப்பதை விடவும் பெரிய தண்டனை வேறு என்ன இருந்து விடப் போகிறது?

@Kozhiyaar - தவறிழைத்தால் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டுப் பழகுங்கள்! ஏனென்றால் அவர்கள் மன்னிப்பை நம்மிடம்தான் கற்க முடியும்!

@Asif Meeran - மார்த்தாண்ட வர்மா அரசராக இருந்த காலம். மாஹின் அபூபக்கரும் அவரது தாயாரும் அந்தக் காலகட்டத்தில் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அந்தக் கடலோர கிராமத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள்.  மாஹின் அபூபக்கர் ஒரு சிறந்த மருத்துவராகவும் இருந்ததால் அவரது சிகிச்சையும் இனிய நடத்தையும் கடலோரவாசிகளில் அதுவரை தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கிறது. அதுவரை தாழ்ந்த ஜாதிக்காரர்களாக ஒடுக்கப்பட்டவர்கள் இஸ்லாத்தைத்  தழுவ அது காரணமாகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறிய செய்தி அரசருக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்குகிறது. நேரடியாக அதனை எதிர்கொள்ளத் தயாரான மார்த்தாண்ட வர்மா அபூபக்கரையும்‌ அவரது தாயாரையும் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு பணிக்கிறார். ஆனால், அவர்கள் அதனை மறுத்து விட அரசரின் படை அங்கே அனுப்பப்படுகிறது.அதனைத் தொடர்ந்து படை வீரர்களுக்கும் கடலோரத் தொழிலாளர்களுக்கும் இடையிலான சண்டையில்  ஏராளமானோர்  இறந்து போகிறார்கள் -  மருத்துவரான அபூபக்கர் உட்பட.
 

நாற்பது நாட்களுக்குப் பின்னர் அபூபக்கரின் தாயாரும் மறைந்து விடுகிறார். நடந்த குருதிப் போரின் சாட்சியான உம்மாவின் பெயரில் ஒரு பள்ளிவாசல் உயர்ந்தெழுகிறது. அந்தப் பள்ளிவாசலின் பெயரே திருவனந்தபுரம் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் இருக்கும் புறநகரொன்றின் பெயருமானது - ஆம். பீமாப்பள்ளி என்ற பெயர்க்காரணம் உருவாகக் காரணம் அபூபக்கரின் தாயாரின் பெயர் பீமா என்பதுதான்.

அந்தக் குருதிக்கறை படிந்த நிலப்பரப்பில் மீண்டுமொரு குருதி சிந்தலை துப்பாக்கிச் சூட்டின் மூலம் நிகழ்த்தியது அச்சுதானந்தன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு. அன்றைக்கு ஒன்பது பேரைக் காவு வாங்கிய காவல்துறையின் ‌துப்பாக்கிகளுக்குப் பின்னால் மறைந்து நின்ற கம்யூனிஸ்ட் அரசின் முதலமைச்சர் அச்சுதானந்தனே பின்னாளில், ‘நடந்த சம்பவம் காவல்‌துறைக்கு ஏற்பட்ட வீழ்ச்சிதான்...’ என்பதை ஒப்புக் கொண்டார்.

முற்றிலும் புனைவாக உருவாக்கப்பட்டதென்று சொல்லப்பட்டாலும் ‘மாலிக்’ திரைப்படம் பீமாப்பள்ளியின் துப்பாக்கிச் சூட்டின் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.  
கற்பனையாக ஓர் இடத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் ரமலாப்பள்ளியென்று அதற்கு நாமகரணம் சூட்டியிருப்பது தற்செயலானதென்று கருத இயலாது.

என்றாலும் புனைவை உருவாக்கும் அதிகாரத்தை எந்தக் கலைஞனிடமிருந்தும் பறித்துவிட உண்மையான ரசிகன் விரும்பமாட்டான் -  அந்தப் புனைவில் தன் சார்புநிலையை உள்நுழைத்து புதிய சரித்திரம் எழுத நினைப்பதென்பது அராஜகச் செயலாகவே இருந்தாலும்.

படத்தில் கலவரம் நடக்கையில் அதிகாரத்தில் இருந்தது முஸ்லிம் லீக் கூட்டணியுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு என்பது போலச் சுட்டப்பட்டிருக்கிறதே தவிர எங்கும் ஒரு செங்கொடி கூடப் பறக்காதவாறு கவனமாகப் பார்த்திருக்கிறார் இயக்குநர்.

அப்படி‌ சுட்டிக் காட்டியிருந்தால் இன்றைய அரசு அதனை விட்டு வைத்திருக்காது என்று எதிர்க்கட்சியினர் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சொல்லப் போனால், புனைவென்ற பெயரில் நடந்த சம்பவத்தின் மீது பொடி தூவி மறைக்க முயலும் கண்கட்டு வித்தைக்கு முயன்றிருக்கிறார் இயக்குநர் என்று வேண்டுமானாலும் இதனைச் சொல்லலாம்.

வெட்ட வெளிச்சமாக இது இருக்கும் நிலையிலும் கேரளத்தில் பீமாப்பள்ளியின் துப்பாக்கிச்சூடு பற்றிய, அதன் அரசியல் பின்னணி குறித்த  தீவிரமான  விவாதங்களுக்கு மட்டுமே இத்திரைப்படம்  வித்திட்டிருக்கிறது.

@shivaas_twitz - தலைக்கு மேல ஹெல்மெட் இருந்தா அது வலிமை update; தலைக்கு மேல குடை இருந்தா அது எளிமை update!

@Brindha Sethu - 36 வருட வித்தியாசம்...  

@aravanakarthikeyan Chinnadurai - உன் துறையில் நீ முதலிடம் அடையும் வரைதான் போட்டி வெளியே. அதன்பின் போட்டி
உன்னோடே.

@Thaadikkaran - கோவால ஊசி போடும்போது கோவாக்சின்னு சொல்றீங்க... அப்போ கோவைல ஊசி போட்டா கோவைஷீல்டுன்னுதானே சொல்லணும்..!

@naaraju - ஆக, பிரபல அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு மீடியாவுக்கும் ஒன்றரை மணிநேர ஸ்லாட் வீதம் ஒதுக்கி ஒரே நாள்ல பேட்டி தட்டி முடிக்கிற மாதிரியே மேற்படி நேர்மை எருமை கருமை story கொடுத்துருக்காங்க முருகன் பெற்றோர்.

@Vinayaga Murugan - ஒரு மனிதனை அவன் யாரென்றே தெரியாத, அவனுக்கு தொடர்பே இல்லாத இன்னொரு மனிதன் காயப்படுத்தவோ, வேதனைப்படுத்தவோ, கொலை செய்யவோ முடியுமா? நன்றாக யோசித்துப் பாருங்க.

சொத்துக்காக சொந்த அப்பனை போட்டுத்தள்ளுறவன், மனைவி தலையில அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொல்லுறவன், வரப்பு பஞ்சாயத்தில் சொந்த அண்ணனை கூலிப்படை வச்சு கொல்லுறவன், புருஷனுக்கு விஷம் வச்சு கொல்லுறவ, நெருங்கிய நண்பனை காட்டிக்கொடுக்கும் துரோகிகள்... இப்படி எல்லா குற்றச்செயல்களிலும் கொலைகாரர்கள் நமது பக்கத்தில் வெகுஅருகாமையில்தான் இருப்பார்கள்.  

இதான் மனிதகுலத்தின் சாபம். இதில் கொடுமை என்னன்னா நம்மால் அவர்களை நாம் சாவதற்கு ஒரு கணம் முன்பு வரைகூட கண்டுபிடிக்கமுடியாது. நாமும் எதிரிகள் எங்கேயோ தூரத்தில் ஆயிரம் மைல்கள்தாண்டி இருக்கிறார்கள் என்று நம்பி படுத்துக் கொண்டிருப்போம்!

@ManoMagikk - கேரள மாநிலம் கண்ணனூரில் உள்ள
நூலகம் / புத்தகக் கடை...

@ItsJokker - பெட்ரோல் விலைய விடு... ஜீய பாத்தியா... அவர் குடைய அவரே பிடிச்சிட்டு போறார். எவ்ளோ சிம்பிளான மனுஷன் தெரியுமா?!

@Gokul Prasad - இந்தியத் திரைப்படங்களில் துக்க வீடுகள், இழவுக் காட்சிகள், சடலத்தைச் சுமந்து செல்லும் காட்சிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைக் கவனித்திருக்கிறீர்களா? பெரும்பாலும் மழை பெய்துகொண்டிருக்கும். சம்பந்தப்பட்ட ஆட்கள் குடை பிடித்துக்கொண்டிருப்பார்கள்.

@Vijayasankar Ramachandran - ஒரு பிரதமரின் தலைக்கு மேல் இருக்கிறோம் என்று கர்வம் கொள்ளாத அந்தக் குடையின் எளிமை இருக்கிறதே...

@Paadhasaari Vishwanathan - எந்த ரயில்நிலைய நடைமேடையிலும் ஒரு நாயாவது அங்கிங்கு அலையும்... நாய் ஒன்று அலையாத ரயில் நிலைய நடைமேடை அழகில்லை!

@villavanvr - சொந்தமா குடை பிடிக்க பெரியவருக்கு 8 வருஷங்கள் ஆயிருக்கு. அப்போ சுயசார்பு இந்தியாவுக்கும் சான்ஸ் இருக்குன்னுதானே அர்த்தம்? பாசிட்டிவா யோசிங்க... ஒரு 800 வருஷம் வெயிட் பண்ணுங்க...

@mohanramko - ஆடி மாதம் புதுமணத் தம்பதிகளைப் பிரிக்கணும்னு சொன்னது யார்றா..? அப்படியே, பழைய தம்பதிகளையும் பிரிக்கணும்னு சொல்லி இருக்கக்கூடாதா?

@manipmp - திமுகவுக்கு பாஜகதான் எதிரி - மதுரையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்.அப்ப அதிமுக..?அது அவ்வளவுதான்!

@JamesStanly - Long Travel பண்ணா மனஅழுத்தம் குறையும்னானுங்க... ஆனா, நான் ட்ராவல் பண்ணா மட்டும் திட்றானுங்க...

@jothims - பெட்ரோல், டீசல் லிட்டர் ரூ.100 க்கு விற்கிறது. 25 லட்சம் கோடிகள் இதில் மட்டும் கொள்ளை. இதற்குப் பிறகும் பெட்ரோல்  பங்குகளில்  தனது புகைப்படத்தை விளம்பரம் செய்துகொண்டிருக்கும் திரு நரேந்திரமோடியின் தைரியத்தைப் பாராட்டுகிறேன்.

@skpkaruna - பலரும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றியே பெருமையாகப் பேசுவார்கள். ஆனால், அதை விட பழமையான எங்கள் சேர்வராயன், கல்வராயன், ஜவ்வாது மலைத் தொடர்களால் ஆன கிழக்கு மலைத்தொடர் இல்லையெனில் தென்னிந்தியா பாலைவனமாகவே உருவாகியிருக்கும். வடகிழக்குப் பருவ மழைக்கான காரணம் எங்கள் மலைத்தொடர்தான்.