ராகி இட்லிஎன்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
ராகி - 1/4 கிலோ,
காய்ந்தமிளகாய் - 100 கிராம்,
இஞ்சி - சிறிது, பூண்டு - 4 பல்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ராகியை சுத்தம் செய்து மிக்சியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். காய்ந்தமிளகாயையும் பொடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் இஞ்சி, பூண்டை லேசாக வதக்கி, காய்ந்தமிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ராகி பொடி, அரைத்த இஞ்சி பூண்டு பொடி, உப்பு, தேவையான அளவு மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து இட்லி தட்டில் மாவை ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.