முருங்கைக்காய் இட்லிஎன்னென்ன தேவை?

இட்லி மாவு - 1 கிலோ,
முருங்கைக்காய் - 4,
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
பச்சைமிளகாய் - 4, கறிவேப்பிலை,
கடுகு - சிறிது, எண்ணெய்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

முருங்கைக்காயை தோலை நீக்கி 2, 3 துண்டுகளாக வெட்டி இட்லி பானையில் தட்டின் மேல் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து, முருங்கைக்காய் சதையை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கி, முருங்கை சதை, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். தேவையான அளவு மாவை எடுத்து, வதக்கிய கலவையை அதில் போட்டு நன்கு கலந்து, இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.