புதினா இட்லி



என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
புதினா - 1 கட்டு,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 4 பல்,
பச்சைமிளகாய் - 5,
புளி - சிறிது,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

புதினா இலையை கழுவி சுத்தம் செய்து இஞ்சி, பூண்டு, புளி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் பாதியளவு மாவு ஊற்றி அதன் மேல் அரைத்த புதினா சாஸ் ஊற்றி மீண்டும் மாவு ஊற்றி வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.