நுங்கு இட்லிஎன்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
நுங்கு - 10,
பனைவெல்லம் - 200 கிராம்.

எப்படிச் செய்வது?

நுங்கை தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனைவெல்லத்தை துருவி நுங்குடன் கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் நுங்கு கலவையை தூவி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். குளிர்ச்சியான நுங்கு இட்லி ரெடி.