பருப்பு வகை இட்லி



என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து - தலா 50 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
பச்சைமிளகாய் - 6,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து மூன்றையும் ஊறவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, ஊறிய பருப்புகளையும் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து இட்லி மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.