வெந்தயக்கீரை இட்லி



என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
வெந்தயக்கீரை - 2 கட்டு,
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்,
காய்ந்தமிளகாய் - 3,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெந்தயக்கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். இட்லி மாவு 1 கப் எடுத்து அதில் கீரை கலவையை சேர்த்து நன்றாக கலந்து, இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.