பப்பாளி இட்லிஎன்னென்ன தேவை?

பப்பாளி - 1,
சர்க்கரை - தேவையான அளவு,
அஜினமோட்டோ - சிறிது,
இட்லி மாவு - 1 கிலோ.

எப்படிச் செய்வது?

பப்பாளியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் பப்பாளி, சர்க்கரை, அஜினமோட்டோ சேர்த்து சாஸ் போன்று நைசாக அரைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் முதலில் பப்பாளி சாஸ் ஊற்றி அதன் மேல் மாவை ஊற்றி மீண்டும் பப்பாளி சாஸ் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.