வாழைப்பூ இட்லிஎன்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
வாழைப்பூ - 1,
வெங்காயம் - 3,
கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கடுகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
தயிர் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, வாழைப்பூ, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும். பின்பு தயிர், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் வாழைப்பூ கலவையை தூவி, அதன் மீது கொத்தமல்லியைத் தூவி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.