சிறுகீரை இட்லி



என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
சிறுகீரை - 1 கட்டு,
சிறுபருப்பு - 100 கிராம்,
காய்ந்தமிளகாய் - 6,
தக்காளி - 1,
பெரிய வெங்காயம் - 2,
உப்பு - தேவைக்கு,
பூண்டு - 4 பல்.

எப்படிச் செய்வது?

சிறுகீரையை சுத்தம் செய்து கழுவி அதனுடன் சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு எடுக்கவும். பின்பு ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும். இட்லி மாவில் உப்பு, அரைத்த கலவையை சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.