பீட்ரூட் இட்லி



என்னென்ன தேவை?

இட்லி மாவு-1 கிலோ,
பீட்ரூட் - 1/4 கிலோ,
பச்சைமிளகாய் - 3,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிது.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை தோல் சீவி நான்கு துண்டுகளாக நறுக்கி கொண்டு, அதனுடன் பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் தேவையான அளவு பீட்ரூட் சாஸ் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.