சீரகம் இட்லி



என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
சீரகம் - 100 கிராம்,
காய்ந்தமிளகாய் - 10,
கறிவேப்பிலை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் சீரகம், காய்ந்தமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்சியில் நைசாக அரைத்து இட்லி மாவில் கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.