சிவப்பு கொய்யா இட்லி
என்னென்ன தேவை?
சிவப்பு கொய்யா - 1/4 கிலோ, சர்க்கரை - 100 கிராம், பாதாம் - 100 கிராம், இட்லி மாவு - 1 கிலோ.
எப்படிச் செய்வது?
மிக்சியில் துண்டுகளாக நறுக்கிய கொய்யா, சர்க்கரை, பாதாம் சேர்த்து அரைத்து இட்லி மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
|