அத்திப்பழ இட்லிஎன்னென்ன தேவை?

அத்திப்பழம் - 1/4 கிலோ,
பனைவெல்லம் - 100 கிராம்,
இட்லி மாவு - 1 கிலோ.

எப்படிச் செய்வது?

அத்திப்பழத்தை சுத்தம் செய்து, பனைவெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை இட்லி மாவில் கலந்து இட்லி தட்டில் ஊற்றி நன்றாக வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.