கொத்தவரங்காய் வற்றல்
என்னென்ன தேவை?
கொத்தவரங்காய் - 1 கிலோ, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் - 50 கிராம், உப்பு - தேவைக்கு.
 எப்படிச் செய்வது?
கொத்தவரங்காயின் காம்பை நீக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து, உப்பு, அனைத்து தூள்களையும் போட்டு பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையானபொழுது வறுத்து சாப்பிடவும்.
|