பூசணிக்காய் வடகம்



என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி, ஜவ்வரிசி, பூசணிக்காய் விழுது - தலா 1 கப்,
பச்சைமிளகாய் விழுது - 4 டீஸ்பூன்,
சீரகம், பெருங்காயத்தூள், உப்பு - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

புழுங்கல் அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும். அதனுடன் பச்சைமிளகாய் விழுது, உப்பு, ஜவ்வரிசி, பெருங்காயத்தூள், பூசணி விழுது சேர்த்து நன்கு அரைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் அரிசிக்கு 3 கப் வீதம் தண்ணீர் ஊற்றி கூழ் போல் கிண்டி சீரகம் சேர்த்து வடகம் போட்டு வெயிலில் நன்றாக காயவைத்து எடுக்கவும்.