கொத்தமல்லி வடகம்



என்னென்ன தேவை?

கொத்தமல்லி விழுது, ஜவ்வரிசி விழுது - தலா 1/2 கப்,
உப்பு - 1 டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப்,
தண்ணீர் - 4 கப், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர், உப்பு போட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு, கொத்தமல்லி விழுது, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.