பீட்ரூட் வடகம்



என்னென்ன தேவை?

அரிசி மாவு, பீட்ரூட் விழுது - தலா 1 கப்,
ஜவ்வரிசி விழுது - 1/2 கப், உப்பு - தேவைக்கு,
பச்சைமிளகாய் விழுது - 4 டீஸ்பூன்,
தண்ணீர் - 4 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, பீட்ரூட் விழுது, அரிசி மாவு, உப்பு போட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.