வாழைத்தண்டு வடகம்



என்னென்ன தேவை?

வாழைத்தண்டு அரைத்த விழுது - 1 கப், உப்பு - தேவைக்கு,
ஜவ்வரிசி விழுது - 1/2 கப், புழுங்கல் அரிசி மாவு - 1 கப்,
தண்ணீர் - 4 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அரைத்த ஜவ்வரிசி விழுது, வாழைத்தண்டு விழுது, புழுங்கல் அரிசி மாவு, உப்பு போட்டு கைவிடாமல் கிளறவும். நன்கு வெந்ததும் இறக்கி கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து பொரித்தெடுக்கவும்.