சுரைக்காய் வடகம்



என்னென்ன தேவை?

சுரைக்காய் விழுது, அரிசி மாவு - தலா 1 கப்,
தண்ணீர் - 3 கப், பச்சைமிளகாய் விழுது,
உப்பு - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர், உப்பு போட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு, பச்சைமிளகாய் விழுது, சுரைக்காய் விழுது சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.