இளநீர் மின்ட் கூலர்என்னென்ன தேவை?

இளநீர் - 1,
பனங்கற்கண்டு - 3 டீஸ்பூன்,
புதினா இலைகள் - சிறிது,
இஞ்சி - 1 துண்டு,
நறுக்கிய இளநீர் வழுக்கை - 1/4 கப்.

எப்படிச் செய்வது?


மிக்சியில் புதினா இலை, இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டி இளநீர், பனங்கற்கண்டு கலந்து இளநீர் வழுக்கையை கலந்து குளிரவைத்து பரிமாறவும்.