லெமன் பார்லி வாட்டர்என்னென்ன தேவை?

எலுமிச்சைச்சாறு - 1 கப்,
பார்லி - 10 கிராம்,
நாட்டுச்சர்க்கரை - 1/2 கப், உப்பு - 1 சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?


வெறும் கடாயில் பார்லியை வறுத்து மிக்சியில் பொடி செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். எலுமிச்சைச்சாறில் உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பார்லி தண்ணீரை ஊற்றி கலந்து குளிரவைத்து பரிமாறவும்.