ஜல்ஜீரா பானி
என்னென்ன தேவை?
புதினா இலைகள் - 1 கைப்பிடி அளவு, எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன், கருப்பு உப்பு - 1/4 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன்.
 எப்படிச் செய்வது?
புதினாவை சுத்தம் செய்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகத்தூள், ஆம்சூர் பவுடர், கருப்பு உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து குளிரவைத்து பரிமாறவும்.
|