பரங்கி பாயசம்என்னென்ன தேவை?

பரங்கிக்காய் - 1 துண்டு,
பால் - 1 கப், சர்க்கரை - 3/4 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

பரங்கிக்காயை தோல் விதை நீக்கி மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து கைவிடாமல் கிளறவும். நன்கு கொதித்து வந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து பாயசம் பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிரவைத்து பரிமாறவும்.