வாழைத்தண்டுச் சாறுஎன்னென்ன தேவை?

வாழைத்தண்டு - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு,
மிளகுத்தூள், சீரகத்தூள்,
உப்பு - தலா 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

வாழைத்தண்டை நறுக்கி, நார் நீக்கி மிக்சியில் இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து குளிரவைத்து பரிமாறவும்.