ஃப்ரூட் ஸ்ரீகண்ட்என்னென்ன தேவை?

மாம்பழம் - 1,
ஆப்பிள் - 1,
திராட்சை - 1/4 கப்,
தயிர் - 1 கப், சர்க்கரை - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
அலங்கரிக்க பாதாம் துருவல், பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிது.

எப்படிச் செய்வது?


மாம்பழத்தின் தோல், கொட்டை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ஆப்பிளை தோல் விதை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தயிரை மெல்லிய துணியில் கட்டி நீரை வடிகட்டவும். பாத்திரத்தில் மாம்பழ விழுது, தயிர் சேர்த்து ஒன்றாக கலந்து, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், ஆப்பிள், விதையில்லாத திராட்சை சேர்த்து கலந்து மேலே பாதாம், மாம்பழ துண்டுகள் அலங்கரித்து ஃப்ரிட்ஜில் செட் செய்து பின் பரிமாறவும்.