ஃப்ரெஷ் சாலட்என்னென்ன தேவை?

வெள்ளரி, தக்காளி, வெங்காயம் - தலா 1,
முளைகட்டிய பயறு - 1/2 கப்,
வேகவைத்த உருளைக்கிழங்கு - 1/2 கப்,
நாட்டுச்சர்க்கரை - 1½ டீஸ்பூன்,
மாதுளை முத்துக்கள் - 1/2 கப்,
பச்சைமிளகாய் - 2,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கொத்தமல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பயறு, உப்பு, நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சைச்சாறு கலந்து மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.